ஒரே நாளில் 06 உலக சாதனைகள்; 14 வயது இந்திய சிறுவன் அசத்தல்..!
14 year old Indian boy sets 06 world records in a single day
14 வயதுடைய மாணவர் ஒருவர் ஒரே நாளில் 06 உலக சாதனைகளை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மராட்டியத்தில் வசித்து வரும் ஆரியன் சுக்லா என்ற மாணவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு, 50, 5 இலக்க எண்களை மனதளவில் விரைவாக கூட்டி விடையை கூறி, ஆரியன் சுக்லா முதன் முறையாக சாதனை படைத்தார்.

ஆனால், இம்முறை எப்போதும் முயற்சிக்கப்படாத உலக சாதனைகளை படைப்பதற்காக சமீபத்தில் துபாய்க்கு சென்றார். அவர், மனதளவில் விரைவாக 100, 4 இலக்க எண்களை கூட்டியும் (30.9 வினாடிகள்), 200 4 இலக்க எண்களை கூட்டியும் (1 நிமிடம் 9.68 வினாடிகள்), 50, 5 இலக்க எண்களை கூட்டியும் (18.71 வினாடிகள்), 10 செட்டுகள் கொண்ட 20 இலக்க எண்களை, 10 இலக்க எண்களால் வகுத்தும் (5 நி 42 வினாடிகள்), 10 செட்டுகள் கொண்ட 2, 5 இலக்க எண்களை பெருக்கியும் (51.69 வினாடிகள்) மற்றும் 10 செட்டுகள் கொண்ட 2, 8 இலக்க எண்களை பெருக்கியும் (2 நி 35.41 வினாடிகள்) சாதனை படைத்திருக்கிறார்.
இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில்; போட்டிகளுக்கு தயாராக தினமும் பயிற்சி மேற்கொள்வது என்பது முக்கிய என கூறியுள்ளார். அத்துடன் இதற்க்காக, அவர் தினமும், 05 முதல் 06 மணி நேரம் வரை பயிற்சி மேற்கொள்வதாக கூறியுள்ளார். அத்துடன், யோகா செய்வது, தான்அமைதியாக இருப்பதற்கும், கவனத்துடன் செயல்படுவதற்கும் உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.

06 வயது முதல் மனதளவில் கணக்கு போடுவதற்கு பயிற்சி மேற்கொண்டு வரும் ஆரியன், 2022-ஆம் ஆண்டு 12 வயதில், ஜெர்மனியில் நடந்த மனதளவில் கணக்கீடு உலக கோப்பைக்கான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
அத்துடன், கடந்த காலங்களில் பல சர்வதேச பட்டங்களை வென்று, மனதளவிலான கணக்கீட்டில் பல்வேறு உலக சாதனைகளை படைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 14 வயதில் 06 உலக சாதனை படைத்த ஆர்யன் சுக்லாவுக்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
14 year old Indian boy sets 06 world records in a single day