பிப்ரவரி 28-இல் வானில் நிகழப்போகும் அதிசயம்; சிவராத்திரி முடிய இப்படி ஒரு நிகழ்வா..?
On February 28 07 planets will be visible in the night sky
எதிர்வரும் பிப்ரவரி-28 இரவு வானில் 07 கோள்களும் காட்சி தர கூடிய அதிசய நிகழ்வு நடைபெறவுள்ளது. உத்தர பிரதேசத்தின் மகா கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி 13-இல் தொடங்கி வரும் பிப்ரவரி-26 மகா சிவராத்திரி தினத்தோடு நிறைவடையவுள்ளது.
இதனையொட்டி, வானில் ஒரு அரிய வானியல் நிகழ்வு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 28-ஆம் தேதி, இரவு வானில் ஏழு கிரகங்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் மட்டுமன்றி அனைவரும் கண்டுகளிக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன், இந்த அறிய நிகழ்வு விஞ்ஞானிகளுக்கு மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தற்போது வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. ஆனால், பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு இரவு மட்டும் அவற்றுடன் புதனும் இணைந்து கொள்கிறதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் சூரிய குடும்பத்தின் ஏழு கிரகங்களை ஒரே இரவில் பார்க்க முடியும். இவற்றில் ஐந்து கிரகங்களை வெறும் கண்களால் மட்டுமே பார்க்க முடியும்; யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரு கிரகங்களை மட்டும் பைனாகுலர் அல்லது டெலஸ்கோப் உதவியுடன் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வானியல் நிகழ்வு பற்றி அறிவியலாளர்கள் கூறியதாவது: தற்போது மட்டுமின்றி, ஆகஸ்ட் 2025 நடுப் பகுதியிலும் ஆறு கிரகங்கள் தெரியும் இதே போன்ற காட்சியைக் காண முடியும் என கூறியுள்ளனர். இந்நிலையில், இதுபோன்ற அண்ட நிகழ்வுகள் ஆன்மிக ஆற்றல்களைப் பெருக்குவதாக ஆன்மீக வாதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
English Summary
On February 28 07 planets will be visible in the night sky