புதிய ஆண்டு..புதிய அவதாரம்... டி.ஆர் கொடுத்த முக்கிய அப்டேட்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், வசன எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். இவரது இயக்கத்தில் ரயில் பயணங்களில், உயிர் உள்ளவரை உஷா, மைதிலி என் காதலி, ஒரு தாயின் சபதம் உட்பட பல திரைப்படங்களை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 

இவரது நடிப்பிற்கும் வசனத்திற்கும் தனி ரசிகர் பட்டாளமே தமிழ் திரை உலகில் இருக்கிறது. தனது மகனான சிலம்பரசனை குழந்தை நட்சத்திரமாக தனது படங்களில் அறிமுகம் படுத்தினார். இந்த நிலையில் டி.ராஜேந்தர் புதியதாக டி.ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற பெயரில் வீடியோ மற்றும் ஆடியோ நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "பிறக்கிறது ஆங்கில புத்தாண்டு 2023. புத்தாண்டு இது புத்தணர்வு தரும் ஆண்டாக புதுமை மிக்க ஆண்டாக குறிப்பு தருமாண்டாக மக்களுக்கு தரும் ஆண்டாக மன அமைதி தரும் ஆண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். 

புத்தாண்டு மலர்கின்ற இந்த தருணத்தில் எனது டி.ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற ஆடியோ மற்றும் மியூசிக் வீடியோ மலர இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தலை ராகம், வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஒரு ராகம், உயிர் உள்ளவரை உஷா, தங்கைக்கோர் தீபம், மைதிலி என்னை காதலி இப்படி என் பட வரிசைகளில் எத்தனையோ பாடல்கள் இசையில் ரெக்கார்ட் பிரேக் பண்ணியிருக்கின்றன.

கிளிஞ்சல்கள் படத்திற்காக பிளாட்டினம் டிஸ்க் வாங்கினேன். பூக்களை பறிக்காதீர்கள், பூ பூவா பூத்திருக்கு, பூக்கள் விடும் தூது, கூலிக்காரன் இவை அனைத்தும் ரெக்கார்ட் பிரேக். இப்படி ரெக்கார்ட் பிரேக் செய்த நான் என்னுடைய கம்பெனிக்கு டி.ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற பெயர் வைத்துள்ளேன். 

நான் படத்திற்காக பாட்டு எழுதியுள்ளேன், கழகியத்திற்காக, கட்சிக்காக, ஏன் காதலுக்காக, பாசத்துக்காக கூட பாட்டு எழுதியுள்ளேன். இப்பொழுது முதன்முதலாக இந்த பாரத தேசத்திற்காக ஒரு பாட்டு "வந்தே வந்தே மாதரம் வாழிய நமது பாரதம்" என்ற பாடலை அகில இந்திய கான்செப்டில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியுள்ளேன். தை திங்கள் பிறந்ததும் இதை வெளியிட இருக்கிறேன்" என டி.ஆர் அறிவித்துள்ளார். டி.ராஜேந்திரன் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director TRajender has started TR records music company


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->