அடக்கடவுளே!!! தெருநாய் ஒன்று 4 வயது சிறுவனை கடித்த கொடூர சம்பவம்...!!! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்...
4year old boy died bitten by stray dog
ஆந்திர பிரதேசம் குண்டூர் சுவர்னபாரதி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன், நேற்று தனது வீட்டிற்கு வெளியே சக வயது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

அப்போது, அந்த சாலையில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அந்த சிறுவனை துரத்திச் சென்று கழுத்தில் கடித்துள்ளது. இச்சம்பவத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளான்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக சிறுவர்கள் தெருநாயை கற்களை கொண்டு விரட்டியுள்ளனர். மேலும்,சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருப்பினும், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தெருநாய் கடித்ததில் சிறுவனின் கழுத்துப்பகுதியில் படுகாயம் ஏற்பட்டு அவன் உயிரிழந்துள்ளான் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.
இச்செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேசமையம்,தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
4year old boy died bitten by stray dog