ஒரே அசிங்கமா போச்சு குமாரு...!!! திருடச் சென்ற வீட்டில் போலீஸ் பயத்தில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்த கள்வன்...!!! - Seithipunal
Seithipunal


சென்னையில், முகப்பேர் பகுதியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் ஒரு வீட்டில் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டில் ஒரு நபர் கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்தம் போட்டனர். இதனால் அந்த நபர் பயத்தில் வீட்டின் கதவை உள்ளே தாழ்பாள் போட்டு கொண்டார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.காவலர்கள் வருவதை அறிந்துகொண்ட வாலிபர் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக் கொண்டார்.

இந்தச் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர் கட்டில் அடியிலிருந்த திருடனை கையும் களவுமாக காவலர்கள் கைது செய்தனர்.

இதில் முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் பாலமுருகன் என்றும் அவரது பெயரில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தொடர்ந்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் சிரிப்பு மூட்டும் விதமாக சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thief hide under bed fear police house he was trying to rob


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->