செல்போன் பயன்படுத்துவதால் ஆபத்து ஆண்களுக்கா? பெண்களுக்கா? - ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்.!!
womens affected mobile use
இந்தக் காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் செல்போன்கள் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என்று எப்போது பார்த்தாலும் அதிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.
இப்படி வீடியோ பார்ப்பதில் யாருக்கு அதிக அளவில் ஆபத்து மற்றும் மன அளவில் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள கூடும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் போன் பயன்படுத்துவதால் சமூகப் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணங்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
English Summary
womens affected mobile use