வீட்டு உபயோக சிலிண்டர் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

இதன் மூலம், தற்போது வரை ரூ.803க்கு விற்பனையாகியிருந்த ஒரு சிலிண்டரின் புதிய விலை ரூ.853 ஆகும். இந்த விலை மாற்றம் நாளை (ஏப்ரல் 6) முதல் நாட்டுமுழுவதும் அமலுக்கு வரும்.

இந்த விலை உயர்வின் முக்கியக் காரணம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டத்தை சரிசெய்வதற்காக என்று மத்திய அரசு விளக்கியுள்ளது.

சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் பயனாளர்களுக்கான நியாயமான விலை நிலைநாட்டும் நோக்கத்தின்பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “நீண்டகால நஷ்டங்களை சமன்செய்யவும், எரிவாயு விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், விலை திருத்தம் அவசியமானதாக இருந்தது. எரிவாயு சப்ளை பாதிக்கப்படக்கூடிய சூழலில் இந்த நடவடிக்கை அவசியமானதாக அமைந்தது” என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

domestic Gas cylinder pricing Hike Central govt 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->