பெரியார், காமராஜருடன், அண்ணாவை பற்றியும் படிக்க வேண்டும் - இயக்குநர் வெற்றிமாறன்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நேற்று தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய், நாளைய வாக்காளர்கள் நீங்கள் தான். அடுத்தடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நமது கண்ணையே குத்திக் கொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதுதான் இப்பொழுது நிகழ்ந்து வருகிறது. ஒரு ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றால் ஒருவர் 15 கோடி செலவு செய்தால் அதற்கு முன் அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என்று சித்தித்து பாருங்கள்.

தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரை படியுங்கள் என மாணவ, மாணவிகளைக் கேட்டுக் கொண்டார்.

விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினர், அரசியல் பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, சினிமாவில் நாம் கூறுகிற ஒரு விஷயம் சமூகத்தில் மிகவும் மதிப்பு மிக்க ஒருவரை சென்றடையும் பொழுது அதன் நேர்மையான தாக்கத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாக நான் பார்க்கிறேன்.

மேலும் நாம் அனைவரும் நம்முடைய வரலாறை படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் உடன் சேர்த்து அண்ணாவையும் படிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director vetriman support Vijay speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->