அண்ணாமலையார் கோவிலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'போடா போடி'. இந்தத் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director vignesh sivan sami dharisanam in annamalaiyar temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->