"ரஜினிலாம் ஒரு சிறந்த நடிகரா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்க.." பிரபல இயக்குனர் அட்டாக்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தியே பேட்டி ஒன்றில் இயக்குனர் அமீர் பேசிய போது அவரிடம் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கொடுத்ததில் அரசியல் இருப்பதாக கூறுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " ஆஸ்கார் மட்டுமில்லை. அனைத்து விருதுகளிலும் இதுபோல அரசியல் இருக்கின்றது.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை விருதுகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆனால் தற்போது இல்லை. சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய சிவாஜி திரைப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது மாநில அரசு சார்பில் ரஜினிகாந்த் கொடுக்கப்பட்டது.

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ரஜினி சிறந்த நடிகரா என்று? அவர் சிறந்த என்டர்டைனர் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் நடிப்பை ஒப்பிட்டு பார்க்கும்போது அவரை சிறந்த நடிகர் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவரது சிறந்த நடிப்புக்கு விருது கொடுக்க வேண்டும் என்றால் முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அந்த படங்களுக்கு எல்லாம் ஏன் விருது கொடுக்கப்படவில்லை? விருதுகள் எல்லாம் ஒரு லாபியாக மாறிவிட்டது." என்று அவர் தெரிவித்துள்ளார். ரஜினியை அவர் சிறந்த நடிகர் இல்லை என்று கூறி இருப்பது ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

directror ameer about rajinikanth in mullum malarum and sivaji movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->