பிரபல மலையாள நடிகர் இன்னசெண்ட் காலமானார்.!
famous comedian and politician innocent passed away
பிரபல மலையாள நகைச்சுவை நடிகரும் அரசியல்வாதியுமான இன்னொசன்ட் (வயது 75) கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
1945 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவரது இயற்பெயர் இனசென்ட் வரீத் தெக்கேத்தல. மலையாளத் திரைப்பட சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வைத்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு சாலக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மிகச் சிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர். இதுவரை 750 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மிகச் சிறந்த காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். பாடகராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் இவர். மூன்று முறை கேரள மாநில அரசுகளின் விருதுகளை பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு இவருக்கு தொண்டையில் கேன்சர் நோயிருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்து அந்த நோயிலிருந்து குணமடைந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டது.
அதன் காரணமாக 2 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து செல்வதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
English Summary
famous comedian and politician innocent passed away