மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மாவுக்கு கெளரவம்..!
Rohit Sharma honoured at Mumbai Wankhede Stadium
வான்கடே மைதானத்தில் உள்ள மூன்று ஸ்டாண்டுகளுக்கு, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் சரத்பவார், முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் ஆகியோரின் பெயர்களை சூட்டுவது என மும்பை கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக 1966-1974-இல் 37 டெஸ்ட், 02 ஒருநாள் போட்டியில் பங்கேற்றவர் வடேகர். 1971-இல் இவரது தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்தின் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கடந்த 2018-இல் தனது 77 வயதில் இவர் காலமானார்.
இதனை தவிர கபில் தேவ் (1983-இல் ஒருநாள்), தோனி (2007-இல் 'டி-20', 2011-இல் 50 ஓவர், 2013-இல் சாம்பியன்ஸ் டிராபி) வரிசையில் இந்தியாவுக்கு 'டி-20' (2024), சாம்பியன்ஸ் டிராபி (2025) வென்று தந்த கேப்டன் ரோகித் சர்மா. இவர்களை கவுரவிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Rohit Sharma honoured at Mumbai Wankhede Stadium