சாஹாலில் சுழலில் சிக்கிய கொல்கத்தா; வரலாறு வெற்றிப் பெற்ற பஞ்சாப்..!
Chahal excellent bowling Punjab made history by defeating Kolkata team
பிரீமியர் லீக் தொடரின் 31-வது போட்டி இன்று பஞ்சாப் சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் - கொல்கட்டா அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிரேயஸ் , பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடினர். இதில் ப்ரியான்ஸ் ஆர்யா 22 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்சித் ராணா பந்தில் அவுட் ஆனார்.

தொடர்ந்து களத்தில் இறங்கியவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. கொல்கட்டா அணி சார்ப்பாக ஹர்சித் ராணா 03 விக்கெட்டுகளையும்,வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பஞ்சாப் அணியின் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில், 112 ரன்கள் வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய கொல்கட்டா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் 02 ரன்களில் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 05 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கொகட்டா அணி கேப்டன் ரஹானே 17 ரன்களில் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரகுவன்ஷி அதிகபட்சமாக 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வகளமிறங்கியவர்களும் சஹாலில்அபார பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். இந்நிலையில் கொல்கட்டா அணி, 15.1 ஓவரில் 95 ரன்களுக்கு சுருண்டது. இந்நிலையில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
English Summary
Chahal excellent bowling Punjab made history by defeating Kolkata team