மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி காலமானார்..!
Former Prime Minister of Malaysia Abdullah Ahmad Badawi has passed away
மலேசியாவில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி 85 வயதில் காலமாகியுள்ளார். கடந்த 2003 முதல் 2009-ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த அவர், முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
அத்துடன், அகமது படாவி இதய பாதிப்பு காரணமாக தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில், கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.
மலேசிய நாட்டின் 05-வது தலைவராக இருந்த அப்துல்லா அகமது படாவி, தேசிய தேர்தலில் போது அவரது கூட்டணி அரசு சாதிக்க முடியாமல் போனதால் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Former Prime Minister of Malaysia Abdullah Ahmad Badawi has passed away