வெளியானது கோட் படத்தின் 4-வது பாடல்.! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். இந்தப் படத்தில் விஜயுடன் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கப்பட்டதையடுத்து, ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகின்றனர். 

இதற்கிடையே, கோட் படத்தின் நான்காவது பாடல் "மட்ட" வெளியாகியுள்ளது. இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goat movie forth song released


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->