பஞ்சாப்பை வெளுத்து வாங்கிய ராஜஸ்தான்; புள்ளி பட்டியலில் 09 ஆவது இடத்துக்கு சென்ற சிஎஸ்கே..!
Rajasthan beat Punjab by 50 runs
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 02-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தினர்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இத அவர்களின் முதல் தோல்வியாகும். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67, ரியான் 43, சஞ்சு சாம்சன் 38 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தானின் இந்த வெற்றியின் மூலம் முன்னாள் சாம்பியன் சென்னை அணி 08-வது இடத்திற்கு பின் சென்றுள்ளது.
English Summary
Rajasthan beat Punjab by 50 runs