தளபதி 68.. உறுதியாக கூறிய கவுதம் மேனன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
Gvm about Thalapathy 68 movie
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் சரத்குமார் நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கான வேலைகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். வாரிசு படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தளபதி 67 படத்திற்கான வேலைகளை படக்குழு துவங்கி விட்டது.
இந்நிலையில், சில வருடங்களாகவே கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது. தற்போது அந்த தகவல் உண்மையாகப் போவதாக இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த கௌதம் மேனனிடம் தளபதி 68 குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, விரைவில் அது கைகூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தளபதி 68 படத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Gvm about Thalapathy 68 movie