பிரபல இசையமைப்பாளர் விவாகரத்து.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
Imman divorced mounika
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் இமான். இவர் தற்போது அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் இமானும், அவருடைய மனைவி மௌனிகாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு இமான்-மௌனிகா தம்பதியினர் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் நானும், எனது மனைவி மௌனிகாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல என்று தெரிவித்துள்ளார்.