நாட்டிற்கு சேவையாற்றிய நடிகர் டெல்லி கணேஷுக்கு, இந்திய விமானப் படை மரியாதை! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ், நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர் ஆவார்.

இந்த நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர்  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் இல்லத்திற்கு சென்ற இந்திய விமானப்படை வீரர்கள், டெல்லி கணேஷ் உடல் மீது தேசியக்கொடி போர்த்தி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கும் முன்பு, இந்திய விமானப் படையிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian air force honors actor delhi ganesh who served the country


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->