மற்றவர்களை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் கடக ராசி; உங்கள் நிதி நிலைமை எப்படி இருக்கும்?
Common characteristics of Cancer
12 ராசிகளில் நான்காவதாக இருக்க கூடிய ராசி கடகம். இந்த ராசியின் அதிபதி சந்திர பகவான். இந்த ராசியில் பிறந்தவர்களின் பொதுவான குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தொடர்ந்து நாங்கள் பார்க்கலாம்.
நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம். பன்னிரண்டு ராசிகளில் அதிக அளவு ஈர்ப்பும் வசீகரிக்கும் சக்தியும் பெற்றிருக்கும் ராசி கடம் ஆகும்.

இந்த கடக ராசியில் பிறந்தவர்கள் எந்தத் துறையில் பிரவேசித்தாலும், அங்கே உங்கள் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலைநிறுத்த கூடியவர்களாக இருப்பீர்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கூடிய ஆற்றல் அதிகம் உங்களிடம் உள்ளது.
அத்துடன், உங்களுக்கு மேலான அதிகாரத் தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்ய கூடியவர்கள். உங்கள் ராசிநாதன் சந்திரன் மனோகாரகராக இருப்பதால், ஒருவரின் மனதை சந்திரன்தான் நிர்ணயிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் வெகு விரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவீர்களாக இருப்பீர்கள்.

எடுத்த வேலையாக இருந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டீர்கள். உங்கள் 04-ஆம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் கட்டடக்காரகராக இருப்பதால், அதிநவீனமாக வீடு கட்ட விரும்புவீர்கள். அதேபோல 06-ஆம் இடம் நோய், கடன், எதிரி ஸ்தானத்துக்கு உரியவர் குரு என்பதால், பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவுவது உங்களுக்கு நன்மை தரும். இதுவே உங்களுக்குப் பரிகாரமாக மாறும் அத்துடன் உங்களுக்கு யோகத்தை அளிக்க கூடியதாக அமையும்.
உங்களின் அசையா சொத்துகளைப் பொறுத்த வரையிலும், மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் இருப்பதுதான் நல்லது. உங்களுடைய வாழ்க்கைத் துணை பற்றிக் குறிப்பிடும் 07-ஆம் இடத்துக்கு அதிபதியாக சனி. ஆக உங்கள் திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். மேலும், உங்களுடைய 08-ஆம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி ஆதலால், உங்களுக்கு தீர்க்காயுள் உண்டு.

இந்த கடக ராசிகாரர்களுக்கு 10-ஆம் இடத்துக்கு உரிய ஜீவன ஸ்தானத்துக்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. உங்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. ஆகவே, நீங்கள் பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவீர்கள். இதில் காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அதிகம் நாட்டம் கொண்டவராக இருப்பீர்கள்.
உங்கள் ராசியில் 11-ஆம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்துக்கு பாதகாதிபதியான சுக்கிரன் வருவதால், உங்களால் மூத்த சகோதர சகோதரிகள் பலன் பெறுவார்களே தவிர, அவர்களால் உங்களுக்கு எந்த உதவியும், பலனும் கிடைக்காது. சந்திரனின் ஆதிக்கத்தில் கடக ராசி வருவதால், சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு விசேஷமானது.
English Summary
Common characteristics of Cancer