கமலின் விக்ரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.? வெளியான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.!
Kamalahasan in Vikram OTT release on July 8
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஜூன் 3-ல் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
நெகட்டிவ் விமர்சனங்களே, எழாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை படம் ரூ.400 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தேதியை படத்தின் ஓடிடி உரிமத்தை பெற்ற ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை -8 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ப்ரோமோவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க காத்துள்ளனர்.
English Summary
Kamalahasan in Vikram OTT release on July 8