பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி பிறந்த நாள்.! வாழ்த்து பதிவிட்ட கஸ்தூரி.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கம்பம் மீனா. தற்போது துணை நடிகையாக இருக்கின்ற இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் நடந்தது. 

அதன் பின்னர் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. தனது குடும்ப வறுமை நிலை காரணமாக எல்ஐசி ஏஜென்டாக கம்பம் மீனா பணிபுரிந்துள்ளார். மிகவும் தைரியமாக வலம் வந்த அவர் அப்போதே அந்த சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரபலமான பெண்ணாக இருந்துள்ளார். 

இதன் பின்னர் பாரதிராஜாவுடைய தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் கம்பம் மீனாவை பாரதிராஜா நடிக்க வைத்துள்ளார். கிராமத்து வழக்கு மொழியில் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் மீனாவுக்கு இந்த சீரியல் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. 

இதன் பின்னர் அவர் வெள்ளித்திரையில் சில திரைப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை கம்பம் மீனா தமிழில் 25 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்து வருகின்றார். இவரது வாழ்க்கை வரலாறு பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் தற்போது அமைந்துள்ளது. 

சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் கம்பம் மீனா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலினும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kambam meena wishes To pandiyan Stores Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->