"என் படத்தை, நானே பார்க்க மாட்டேன்." கீர்த்தி சுரேஷால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் மற்றும் ரெமோ போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். 

இவர் மகாநடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்று தேசிய விருதுகளை வென்றார். அந்த படத்தில் நடிகை திலகம் சாவித்திரியாகவே அவர் வாழ்ந்து காட்டி பலரது மனதையும் கொள்ளை அடித்தார். இறுதியாக இவரது நடிப்பில் சாணிகாகிதம் மற்றும் சர்க்கரு வாரி பட்டா போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக பாலிவுட் படங்களில் களமிறங்க வேண்டும் என்று தனது உடல் எடையை குறைத்து சமீபகாலமாக கதையம்சம் பொருந்திய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில், "எனது படங்களை நான் பார்க்கும் பொழுது நிறைய குறைகள் இருப்பதை பார்க்கிறேன். எனவே, இந்த தவறுகள் மீண்டும் கண்முன் வந்து செல்வதால் இதைவிட சிறப்பாக நடித்து இருக்கலாமே என்ற எண்ணம் எனக்கு வரும். இதனால், நான் நடித்த படங்களை நானே பார்க்க மாட்டேன்." என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

keerthi suresh makes shack to fans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->