நடிகர்களுக்கு பாலியல் தொல்லை! அதிரவைக்கும் பரபரப்பு புகார்!
kerala cinema actor abused case
கேரள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா ஆணையம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல நடிகைகளுக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தொடர்ந்து, கேரள நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.
இதுவரை நடிகைகள் அளித்த புகார்களின் பேரில் இயக்குனர், நடிகர்கள் என 8 பேர் மீது 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் காரணமாக கேரள திரைத்துறையின் நடிகர்கள் சங்கம் (AMMA) முழுவதுமாக கலைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள திரைத்துறையில் நடிகர் ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஒருவர் வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் நவஜீத் நாராயணன் தான் இந்த புகாரை கொடுத்துள்ளார்.
அவரின் அந்த புகாரில், வாய்ப்பு கேட்டு ஒரு இயக்குனரை நேரில் சந்தித்தாகவும், அப்போது அந்த இயக்குனர் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டு தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், உடனே அவரின் கன்னத்தில் அறைந்து விட்டு கிளம்பி வந்ததாகவும் நடிகர் நவஜீத் நாராயணன் தெரிவித்துள்ளார்.
English Summary
kerala cinema actor abused case