29 வருடங்களுக்கு முன்பே இவ்வளவு சம்பளம் வாங்கினாரா கே எஸ் ரவிக்குமார்?
ks ravikumar shares the infomation about his salary for a mega hit film
1994 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சரத்குமார், குஷ்பூ, விஜயகுமார், மீனா பொன்னம்பலம், மனோரமா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் நாட்டாமை. இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
தமிழ் மொழி மட்டுமல்ல அது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியாக அமைந்தது. சரத்குமாரின் சினிமா வாழ்க்கையில் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படம் என்று கூறலாம்.
இத்திரைப்படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு ரீமேக்கில் விஜயகுமார் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே இந்த திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்பதை நாம் அறியலாம்.
அந்தக் காலகட்டத்தில் இத்திரைப்படத்தை இயக்கியதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்பதை கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதன்படி இந்தத் திரைப்படத்தை இயக்க அவர் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார் என அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.
English Summary
ks ravikumar shares the infomation about his salary for a mega hit film