தேர்தல் விதிகளில் மாற்றம் - உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு.! - Seithipunal
Seithipunal


தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருக்கும் சி.சி.வி.டி., வெப் கேமரா போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று பரிசோதனை செய்ய முடியும். இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் நடத்தை விதி 93 (2) (a)-ன் படி தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.

இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, விதி 93 (2) (a) கீழ், 'தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்' என்று திருத்தம் செய்து மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டப்பிரிவில் குறிப்பிட்டுள்ள 'காகித ஆவணங்களை மட்டுமே புகார்தாரர்கள் பார்க்கமுடியும்' என்று அதிகாரிகள் தெளிவுபடுத்துகின்றனர். 

இந்த நிலையில், தேர்தல் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது:-

"தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அவசர கதியில் தன்னிச்சையாக, யாருடனும் ஆலோசிக்காமல் முக்கியமான சட்டதிருத்தத்தை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. தேர்தல் நடைமுறையின் நேர்மை வேகமாக அழிந்து வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் மீட்டெடுக்க உதவும் என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass case file against change election rules


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->