எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க உறுதுணையாக இருப்பவர்களுடன் அதிமுக கூட்டணி வைக்கும் - செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி..!
sellur raju press meet about alliance
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு துணையாக இருப்பவர்களுடன் கூட்டணி வைப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;-
"அ.தி.மு.க.வின் தலைமையை ஏற்று, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு உறுதுணையாகவும், எங்கள் ஆட்சி மலர்வதற்கு துணையாகவும் யார் வருகிறார்களோ, அவர்களுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துக் கொள்ளும்.
தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ளது. பொதுச்செயலாளர் அனைத்து முடிவுகளையும் எடுப்பார். பாப்கானுக்கு கூட ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. எதன் அடிப்படையில் வரியை விதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அதில் அபரிமிதமான வருவாய் வருகிறது என்று சொல்கிறார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப்பொருளுக்கு வரி விதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல" என்றுத் தெரிவித்தார்.
English Summary
sellur raju press meet about alliance