தைரியமிருந்தால், மானமிருந்தால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறவும்! வெளுத்து வாங்கிய பாஜக!
BJP Narayanan condemn to DMK CPIM
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியிடம் பல கோடி ரூபாய் கையேந்தி பெற்றுக் கொண்ட கம்யூனிஸ்டுகள் தான் ஜாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வகையில் தூண்டி வருகின்றனர்.
வேங்கை வயலில் நடைபெற்ற கொடூரத்திற்கு பின்னும் திமுக வோடு உறவு கொண்டிருப்பது தான் வெட்கக்கேடான செயல்.
துருபிடித்த கம்யூனிஸ கொள்கைகளும், நீர்த்துப் போன ஈ.வெ.ரா கொள்கைகளும் தான் தமிழகத்தில் ஜாதி உணர்வுகள் மேலோங்குவதற்கு காரணம்.
தைரியமிருந்தால், மானமிருந்தால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறவும். அதை விடுத்து, தேர்தலில் சீட்டு பேரம் பேச, பண பேரம் பேச இது போன்று ‘உதார்’ விடுவது வெட்கக்கேடு மட்டுமல்ல, தலித் மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்யும் மிகப் பெரும் துரோகம்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan condemn to DMK CPIM