அச்சச்சோ.. மருத்துவமனையில் குஷ்பூ.. என்ன ஆச்சு? கவலையில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையானவர் நடிகை குஷ்பு. இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி முதலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பதவி வகித்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்து செயற்குழு உறுப்பினராக உள்ளார். 

இவர் தேசிய பெண்களுக்கான ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். சமீபத்தில்  குஷ்பூ சிறுவயதில் தன்னுடைய தந்தை தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

இத்தகைய நிலையில், தற்போது நடிகை குஷ்பூ தனக்கு காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, அந்த பதிவில் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். 

காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்துடன் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kushboo admittted in hospital for Fever


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->