சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.? உறுதிப்படுத்திய இயக்குனர்.!
Lokesh kanagaraj direct Rajinikanth 171th movie
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள 170 திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின் இயக்குனராக நான் சொல்கிறேன் இந்திய அளவில் லோகேஷ் கனகராஜ் சிறந்த இயக்குனராக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
லியோ படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இது ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என கூறுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு கதை கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கின் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
English Summary
Lokesh kanagaraj direct Rajinikanth 171th movie