நடிகர் விஜய்சேதுபதி மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்த பெங்களூருவிற்கு சென்றிருந்தார். அப்போது அவரின் உதவியாளர்  மீது ஒருவர், நடிகர் மகா காந்தியை தாக்கி உள்ளார்.

இது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே விஜய் சேதுபதியை உதவியாளரை எட்டி உதைத்த மகா காந்தி என்பவர் யூட்யுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்து இருந்தார்.

அதில், விஜய் சேதுபதியுடன் பேசும் போது முத்துராமலிங்க தேவரை அவமதித்து பேசியதாகவும், அப்படி பேசவேண்டாம் என அவரை கண்டித்த போது அவருடைய ஆட்கள் தன்னை தாக்கியதால் தான் அப்படி நடந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி, அவரின் மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

அதே சமயத்தில் மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றத்தில், பெங்களூரில் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் சென்னையில் வழக்கு தொடர முடியாது என்று நடிகர் விஜய்சேதுபதி தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maha ganthi case vijay sethupathy ChennaiHC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->