எம்.எல்.ஏ வரும் வரை பசியில் வாடிய குழந்தைகள்.. காலை உணவு திட்டத்தில் அவலம்.!
mayiladudhurai MLA delay for free breakfast
நேற்று முதல்வர் ஸ்டாலின் மதுரை அரசு பள்ளியில் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்த நிலையில், இன்று மீதமுள்ள 37 மாவட்டங்களில் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது.
அந்த வகையில், மயிலாடுதுறையில் தமிழக அரசின் ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதில், அப்பகுதி அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்தனர்.
இதில் எம்.எல்.ஏ ராஜகுமார் கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ ராஜ்குமார் அனைவரும் முதல் நிகழ்ச்சியில் உணவை பரிமாறிவிட்டு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் தாமதமாக 09:30 மணிக்கு மேல் பள்ளிக்கு வந்தனர்.
அதுவரை அங்கிருந்த 5 ஆம் வகுப்புவரை பயிலும் சிறு குழந்தைகள் சாப்பிட வைக்கப்படாமல் பசியுடன் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பசி தெரியாமல் இருக்க ஏதேதோ விளையாட்டுகளை ஆசிரியர்கள் சொல்லி விளையாட வைத்து நேரத்தை கடத்தியுள்ளனர்.
பின்னர் 09:45 மணிக்கு எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் வந்த பின்னர் அவர்களுக்கு தாமதமாக உணவு வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு தாமதமாக சாப்பாடு கொடுத்து விட்டு பள்ளியும் தாமதமாக துவங்கியுள்ளது.
English Summary
mayiladudhurai MLA delay for free breakfast