"வள்ளலை தமிழ் திரையுலகம் இன்று இழந்திருக்கிறது." தம்பி ராமையா உருக்கம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக  நீண்ட காலமாக வலம் வந்தவர் மயில்சாமி. மறைந்த நடிகர் விவேக் உடன் இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. பாக்கியராஜின் தாவணிக் கனவுகள் திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தில், தூள், கில்லி,  திருவிளையாடல், ஆரம்பம், வீரம் உள்ளிட்ட  200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். தீவிர சிவ பக்தரான இவர் நேற்று இரவு மகா சிவராத்திரியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திரையுலகினர் பலரும்  இவருக்கு அஞ்சலி செலுத்திய வருகின்றனர்.

மறைந்த நடிகர் மயில்சாமியின் உதவும் குணம் பற்றி  நகைச்சுவை நடிகர்கள் தம்பி ராமையா மற்றும்  கிங்காங் ஆகியோர் ஒரு செய்தியாளர்களிடம்  பகிர்ந்து கொண்டனர்.
இது பற்றி பேசிய கிங்காங் "மறைந்த நடிகர் மயில்சாமி எனக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே மிகவும் நெருங்கிய நண்பர் என்று தெரிவித்தார். மேலும்  இயற்கையாகவே உதவும் குணம் படைத்த அவர் யாருக்கு  உதவி தேவைப்பட்டால்  அவரிடம் இருக்கிறதோ, இல்லையோ நிச்சயமாக  கேட்ட உதவியை செய்து விடக் கூடிய மனம் படைத்தவர்" என தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் மயில்சாமியை பற்றி பேசிய தம்பி ராமையா, "மறைந்த முதலமைச்சர்  மற்றும் நடிகருமான  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மீதும்  சிவபெருமான் மீதும் மிகப்பெரிய பற்று கொண்டவர் மயில்சாமி என தெரிவித்தார். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்  மயில்சாமி என்று கூறிய அவர் எம்ஜிஆரின் திரைப்படங்களை தனது வாழ்க்கை பாடமாக எடுத்து வாழ்ந்து வந்தவர் அவர் எனவும் தெரிவித்தார். யார் என்ன உதவி கேட்டாலும்  தன்னால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய ஒரு மனம் படைத்த நல்ல நண்பரை இழந்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார். இது ஒன்றும் இறப்பிற்கான வயது அல்ல எனவும் வருத்தத்துடன் கூறினார். 

நடிகர் மயில்சாமியின் உதவும் குணத்தை பற்றி  மறைந்த நடிகர் விவேக் ஒரு காணொளியில் பேசியிருப்பது நமக்கு ஞாபகம் இருக்கலாம். 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது  அதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாலிவுட் நடிகர் விவேக் ராய் உதவி செய்து கொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட மயில்சாமி தான் அணிந்திருந்த எம்ஜிஆர் உருவம் பொறித்த டாலரை சுனாமி நிவாரண நிதிக்காக விவேக் ஓபராயிடம் அளித்தார் என்று  மறைந்த நடிகர் விவேக் அந்த காணொளியில் கூறியிருப்பார். இப்படிப்பட்ட ஒரு உதவும் மனம் படைத்த வள்ளலை தமிழ் திரையுலகம் என்று இழந்திருக்கிறது." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayilsamy the man who never said no to help actor thamby ramaiah mourns


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->