குருவாயூர் கோவிலில் காதலனை கரம்பிடித்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்.!
Meera Nandan wedding photos viral
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மீரா நந்தன் முதலில் சீரியல் நடிகையாக இருந்து பின்னர் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒளிபரப்பான 'வீடு' என்ற தொடரின் மூலம் முதன்முதலாக அறிமுகமானவர்.
இதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு மலையாள படமான 'முல்லா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான 'வால்மீகி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ஆதியுடன் இணைந்து 'அய்யனார்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த மீரா கடந்த ஆண்டு வெளிவந்த ''ஜெஸ்னா'' என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை மீரா நர்த்தனுக்கும் அவரது காதலரான பியூ ஸ்ரீஜூ என்பவருக்கும் இன்று காலை குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

எளிய முறையில் நடைபெற்ற திருமணம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மீரா நந்தனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Meera Nandan wedding photos viral