சோகத்தில் மூழ்கிய திரையுலகம் - "முண்டாசுப்பட்டி" பட நடிகர் மோகன் காலமானார்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 'முண்டாசுப்பட்டி’, ‘வீரன்’ உள்ளிட்ட ஏராளமானப் படங்களில் நடித்தவர் நடிகர் மோகன். மதுரையைச் சேர்ந்த இவர் இன்று காலை உடல்நலக் குறைவினால் காலமானார். இவரது இந்த எதிர்பாராத மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் மோகனின் மறைவை நடிகர் காளி வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, ‘ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். 

அவருக்கு ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தார். இவருக்கு ’முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் இயக்குநர் ரவிக்குமார் வாய்ப்பளித்தார்.

இவருக்கும் ‘வீரன்’ பட இயக்குநர் சரவணனுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mundasupati movie actor mohan passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->