முதல் முறையாக குழந்தைகளின் முகத்தைக் காட்டிய நயன்தாரா–விக்னேஷ் சிவன் தம்பதி.!
nayanthara vignesh shivan couples share picture showing sons face
முதல் முறையாக குழந்தைகளின் முகத்தைக் காட்டிய நயன்தாரா–விக்னேஷ் சிவன் தம்பதி.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. ஐவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடி தான் திரைப்படத்தைத் தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இந்தக் காதல் ஜோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பல்வேறு திரைபிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதன் பின்னர் அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைகளுக்கு 'உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்' என்று பெயர் சூட்டியிருப்பதாக அறிவித்தனர்.
கடந்த ஒரு வருடமாக பண்டிகை நாட்களில் குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். ஆனால், குழந்தைகளின் முகத்தை காட்டாமலேயே புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேற்று இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு முகம் தெரியும்படியான புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
English Summary
nayanthara vignesh shivan couples share picture showing sons face