#Oscars2022 || ஆஸ்கர் விருதுகள் முழுவிவரம்.!
Oscars WILL SMITH KingRichard
இன்று 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை “தி அய்ஸ் ஆப் டேமி ஃபாய்“ திரைப்படத்திற்காக “ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன்“ வென்றார்
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ’தி பவர் ஆப் தி டாக்’ திரைப்படத்திற்காக ’ஜேன் கேம்பியன்’ வென்றார்.
சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஜாப்பனீஸ் திரைப்படமான 'டிரைவ் மை கார்' வென்றது.
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'ஷியான் ஹெட்டர்' இயக்கிய 'கோடா' வென்றது
லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை 'தி லாங் குட்பை' வென்றது
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'க்ரூல்லா' திரைப்படத்திற்காக ’ஜென்னி பெவன்’ வென்றார்
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை டிராய் கோட்சூர் வென்றார்.
சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'தி வின்டர்ஹீல்ட் வைபர்' வென்றது.
சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதை 'என்கான்டோ' திரைப்படம் வென்றது
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'தி குயின் ஆஃப் பேஸ்கட்பால்' வென்றது
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் DUNE திரைப்படத்திற்கு 6 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது ஒளிப்பதிவு, இசை, விஷூவல் எஃபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்சன் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக கிரேக் ஃபிரேசர், சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பார்ட்லெட் ஆகியோருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருது DUNE படத்திற்காக 4 பேர் பெற்றுக்கொண்டனர்
சிறந்த துணை நடிகைக்கான விருதை அரியானா டிபோஸ் வென்றார். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' படத்திற்காக விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'பெல்ஃபாஸ்ட்' படத்திற்காக 'கென்னித் பிரனாக்' வென்றார்.
English Summary
Oscars WILL SMITH KingRichard