சமூக வலைத்தளங்களில் மோதும் அரசியல் காட்சிகள் - ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக, தவெக, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இதற்கிடையே மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. 

மும்மொழி கொள்கையை உள்ளடக்கியுள்ளதால் புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.

புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை வழங்குவோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், மத்திய பாஜக அரசுக்கும், மாநில திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் திமுக, பாஜக இடையே சமூகவலைதளத்திலும் கருத்து மோதல் நிலவி வருகிறது. 

அதாவது, 'கெட் அவுட் மோடி' (GetOutModi), 'கெட் அவுட் ஸ்டாலின்' (GetOutStalin) என்ற ஹேஸ்டேக்குகள் தொடர்ந்து உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இதே சமயம், மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்துள்ள அதிமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களை கண்டித்து அதிமுக போராட்டங்களை நடத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். விக்கிரவாண்டியில் கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்குழு கூட்டம் நடத்தினார்.

மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கட்சி ரீதியிலான நடவடிக்கைகளை விஜய் தீவிரப்படுத்தி வருகிறார். சமூக வலைதளத்தில் 'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஸ்டேக்கள் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் 'TVKForTN ' ஹேஸ்டேகும் டிரெண்ட் ஆகி வருகிறது. 

இதேபோல், நாம் தமிழர் கட்சி, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தேர்தலுக்கான கூட்டணி குறித்து தற்போதே அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை எடுக்கத்தொடங்கியுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

political party hastag trend on social media


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->