கெஞ்சி தாழ்மையோட கேட்கிறேன்!...தமிழில் பேசுங்க - இயக்குனர் செல்வராகவன்! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தனுஷ் இயக்கிய 'ராயன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் செல்வராகன், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தான் நினைக்கும் விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில்  இயக்குனர் செல்வராகவன் நேற்று ஒரு  வீடியோவினை பகிர்ந்துள்ளார். அதில், தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்: 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்றார் மகாகவி பாரதியார். அது இன்றைக்கு உண்மையாகி வருகிறது.

ஆங்கிலம் பேசுவதற்கான அவசியம் எனக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால், எந்த இடத்திலும் தமிழில் பேசுவதை அவமானமாக நினைக்காதீர்கள் என்றுதான் கூறுகிறேன் என்று பேசியுள்ளார்.

நான் பள்ளி, கல்லூரிகளில் ஆங்கிலம் தெரியாமல் நிறைய கஷ்டப்பட்டு மன அழுத்ததிற்குள்ளாகியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆங்கிலத்தைப் படிப்படியாகக் கற்றுக் கொண்டு சினிமாவிற்கு வந்த பிறகு பேச ஆரம்பித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் பேசுவதை பிகர் அவமானமாக நினைத்தால், அப்படிப்பட்ட பிகர் தேவையில்லை என்று உதறித் தள்ளி விடுங்கள் என்றும், கெஞ்சி தாழ்மையோட கேட்கிறேன் தமிழில் பேசுங்க என்றும், நம் தமிழ் மொழியை உலகெங்கிலும் கொண்டு சேர்ப்போம் என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Please humbly ask Speak in Tamil Director Selvaraghavan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->