நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு.. காரணம் என்ன.?
Police security to actress ishwarya Rajesh house
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பர்ஹானா. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பர்ஹானா திரைப்படம் கடந்த மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால், இந்த திரைப்படம் இஸ்லாம் மதத்திற்கு எதிராக இருப்பதாக ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Police security to actress ishwarya Rajesh house