சூர்யா பட இயக்குனருடன் ரஜினி 171 படம்.? வெளியான ஸ்ட்ராங் ரிப்போர்ட்.?!
Rajini 171 Movie with Nganavel
ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே இடம்பெற்றுள்ளது. யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் விநாயகன் உள்ளிட்ட பலரும் இதில் நடைத்துள்ளனர்.
அத்துடன் இதில் சிவ ராஜ்குமார் மற்றும் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது 70% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த திரைப்படத்திற்கு பின்னர் ரஜினியின் 121 வது படத்தை யார் இயக்குவார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெய் பீம் பட இயக்குனரான ஞானவேலுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இது குறித்து கோலிவுட் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து உறுதியான தகவல் வெளியாகி இருக்கின்றது. ஜெய் பீம் திரைப்படத்தைப் போல உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக இது இருக்கும் என்றும், இதில் ரஜினி ஒரு போலீசாக நடிக்க இருக்கிறார் என்றும், சமூகத்திற்கு முக்கிய மெசேஜ் சொல்லும் படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
English Summary
Rajini 171 Movie with Nganavel