எல்லாமே நடக்குது.. ஓவர் குஷியில் ராஷ்மிகா மந்தனா..!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா. தனது எக்ஸ்பிரஷன் மூலமாக நிறைய ரசிகர்களை கவர்ந்தார். இவரது கீதா கோவிந்தம் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. 

சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருந்தது. தற்போது, நடிகர் விஜயுடன் சேர்ந்து ராஷ்மிகா வாரிசு படத்தில் நடிக்கிறார் . இத்தகைய நிலையில், அவர் தனது கனவு நிறைவேறி விட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில்," சினிமா துறையில் வலம் வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எல்லோருமே தங்களது படங்கள் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், நான் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் பிரபலமாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.

 நான் நினைத்ததை போல கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறேன். மேலும், நடிகர் விஜயுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன். அதுவும் நிறைவேறிவிட்டது  அத்துடன் எனது பிறந்தநாளை அமிதாப்பச்சனுடன் சேர்ந்து கொண்டாடியது இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட எனக்கு பெரிய சந்தோஷம் என்ன இருக்கப்போகிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika manthana dreams Comes True


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->