'ரூட் நம்பர் 17' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal


கடந்த 25 ஆம் ஆண்டு வெளியான 'ஜித்தன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகன் ரமேஷ். 

இவர் நடிகர் ஜீவாவின் சகோதரர் ஆவார். ஜித்தன் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார். ஆனால் பிறகு எந்த படங்களும் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை.

இதனை தொடர்ந்து ரமேஷ் பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்டு மீண்டும் சினிமாவில் வருவதற்கான ஆயுதமாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

தற்போது அபிலாஷ் ஜி தேவன் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். 'ரூட் நம்பர் 17' என பயிரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஔச்சேப்பன் இசையமைத்துள்ளார். 

பிரசாத் பிரணவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜீவா வெளியிட்டார். 

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Root No 17 Movie Release Update


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->