அடேங்கப்பா.! மீனா மீது சிவாஜிக்கு இம்புட்டு பாசமா.? கதையையே மாற்றி எழுதிய வரலாறு.!  - Seithipunal
Seithipunal


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எஜமான் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு  கதாநாயகியாக அறிமுகமானவர் மீனா. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் இருக்கிறது. அந்தக் குழந்தை தளபதி விஜயின் தெறி படத்தில் நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பாதிப்பிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் மீனா. தனது மகள் மற்றும் தோழிகளுடன் நேரத்தை செலவிட்டு மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகை மீனாவை பற்றிய செய்தி ஒன்று தற்போது சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. 1982 ஆம் வருடம் சிவாஜி, நடிகைகள் லட்சுமி, மஞ்சுளா நெஞ்சங்கள் சுந்தரராஜன் இயக்கியிருப்பார்.இந்த திரைப்படத்தை நடிகர் விஜயகுமார் தயாரித்துள்ளார்.

திரைப்படத்தில் ஒரு சிறுவன் கதாபாத்திரத்திற்காக படக்குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அந்த நேரத்தில் சிவாஜி ஒரு விழாவில் சிறுமியாக இருந்த மீனாவை பார்த்துள்ளார். உடனே மீனாவின் தாயிடம் சென்று சிறுவனாக நடிக்கவைக்க அனுமதி கேட்டார். ஆனால் மீனாவின் தாய் முடியை எல்லாம் வெட்ட வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து சிவாஜி பட குழுவியிடம் மீனாவுக்காக பேசி அந்த சிறுவன் கதாபாத்திரத்தை சிறுமியாக மாற்றி படத்தை எடுத்துள்ளனர். இந்த தகவல் தற்போது பரவி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaji Request To nenjangal Team for actress meena 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->