சூரியவம்சம் படத்தின் முக்கிய புள்ளி! பிரபல தமிழ் படத்தின் இயக்குனர் தற்கொலை! பெரும் சோகம்!
Suryavamsam AD Ravi Shankar Suicide
சூரியவம்சம் படத்தை இயக்கிய விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ரவி சங்கர். சூரியவம்சம் படத்தில் வரும் அனைவர் மனதிலும் இடம் பிடித்த 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடலை எழுதியவரும் இவர்தான்.
இவர் முதன் முதலாக கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மற்றும் காதலர் தினம் படத்தின் கதாநாயகன் குணால் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் இவர் தான் எழுதி இருந்தார். இதன் பின்னர், இயக்குனர் விக்ரமன் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். இதுவே இவரது கடைசி படமும் ஆகும். இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் சென்னை கே.கே.நகர் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், ரவி சங்கர் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனிமை மற்றும் பட வாய்ப்புகள் கிடைக்காததால்தான் 63 வயதில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக பலராலும் பேசப்படுகிறது.
English Summary
Suryavamsam AD Ravi Shankar Suicide