கோட் படத்திற்கு அந்த சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு....என்னவா இருக்கும்? - Seithipunal
Seithipunal


வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கிராபிக்ஸ், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 'தி கோட்' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் தந்தை, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும்  துப்பாக்கி சண்டை, மோட்டார் சைக்கிளில் பறப்பது போன்ற சாகச காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இள வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன..

2 நிமிடம் 51 வினாடிகள் நீளமுள்ள இந்த படத்தின் டிரெய்லர் 50 கோடி பார்வைகளை கடந்து டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இந்தநிலையில், தற்போது 'தி கோட்' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Censor Board that gave that certificate to the movie Code what would it be


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->