நடிகர் ஜீவா நடித்த 'பிளாக்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜீவா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர். இவர் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். சிவா மனசுல சக்தி,கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர், ஆக்சன் படங்களில் நடிக்கத் துவங்கியதும் சினிமாவில் மார்க்கெட் இழந்தார்.

நடிகர் ஜீவா நடிப்பில் இறுதியான வெளியான படங்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை எந்தப் படமும் பெறவில்லை.

தற்போதைய நிலையில் ,மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார். 

கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்து உள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

மேலும் இப்படம் வருகிற செப்டமாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The crew released the first look poster of actor Jeevan's Black


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->