பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் 'ஆடு ஜீவிதம்': ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


பிளஸ்சி ஐப் தாமஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இந்த படம் மலையாளத்தில் மிகவும் புகழ் பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நாவல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக செல்லும் இருவர் அரேபியர்களிடம் சிக்கிக்கொண்டு ஆட்டுப்பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த கதை. 

இந்த நாவல் கடந்த 2019 கேரளா சாகத்ய அகாடமி விருதினை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்காக நடிகர் பிரத்விராஜ் சுமார் 30 கிலோ எடை குறைத்துள்ளார். 

கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது தொடர்பாக நடிகர் பிரித்விராஜ் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். 

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீதர் பிரசாத் எடிட் செய்துள்ளார். 

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற 2024 ஏப்ரல் 10 ஆம் தேதி உலக அளவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the goat life Release Update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->