இனி பேச்சு இல்லை வீச்சுதான்... ''தி கோட்'' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த யுவன்!  - Seithipunal
Seithipunal


‌வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தி கோட்'. இந்த திரைப்படத்தில் பிரசாந்த் மோகன், பிரபுதேவா, யோகி பாபு, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், சினேகா, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் முனி ஒளி பதிவு செய்கிறார். 

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, பத்திரிகையாளர்களை சந்தித்த யுவன் திரைப்படத்தின் அப்டேட் கேட்டதற்கு முதலில் சொல்ல முடியாது என தெரிவித்தார். 

பிறகு இந்த முறை தெளிவாக இருக்கேன். இனிமேல் பேச்சு இல்லை வீச்சு தான். நானும் ஆர்வமாக உள்ளேன். தி கோட் திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Goat movie update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->