விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்..! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தி கோட். 

இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி உளியிட்ட பல திரபிரபலன்கள் நடித்துள்ளனர்.

மேலும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ,  நாளை இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், தி கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

‘The G.O.A.T.’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘THE GOAT' திரைப்படம் நாளை வெளியாவதை ஒட்டி, இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Greatest Of All Time‌ Vijay Movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->